அமெரிக்க GPS ஐ கைவிட்டு சீன BeiDou ஐ நடைமுறை செய்யும் ஈரான் 

அமெரிக்க GPS ஐ கைவிட்டு சீன BeiDou ஐ நடைமுறை செய்யும் ஈரான் 

தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த காலம் முதல் ஈரான் அமெரிக்காவின் Global Positioning System (GPS) என்ற நகர்வுகளை கண்காணிக்கும் செய்மதி கட்டமைப்பை பயன்படுத்தி வந்திருந்தது.

ஆனால் ஜூன் மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து 12 தினங்கள் ஈரானை தாக்கியபோது அமெரிக்காவின் GPS சேவையில் தங்கி இருந்தமையால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தது ஈரான். GPS spoofing ஒரு பிரதான ஆபத்து.

அதனால் தற்போது ஈரான் அமெரிக்காவின் GPS சேவையை கைவிட்டு சீனாவின் BeiDou சேவையை ஈரானில் நடைமுறை செய்ய தீர்மானித்துள்ளது.

BeiDou தொழில்நுட்பம் மத்திய கிழக்கு நாடான ஈரான் செல்ல அமெரிக்க தொழில்நுட்பங்கள் வழங்கிய ஆபத்தே காரணம். கணனிகள், smartphones, இணையம், smart TV, GPS போன்றவை எல்லாமே பாவனையாளர் அறியாத ஆபத்துகளை கொண்டவை.