அயர்லாந்து கழிவு குழியில் 796 குழந்தைகளின் உடல்கள்

அயர்லாந்து கழிவு குழியில் 796 குழந்தைகளின் உடல்கள்

அயர்லாந்தின் Tuam என்ற நகர் கழிவு குழி ஒன்றில் குறைந்தது 796 குழந்தைகளின் அழிந்த உடல்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. இவை சுமார் 80 ஆண்டுகள் பழையன.

இந்த குழந்தைகள் பொதுவாக சட்டப்படியான தந்தை இன்றி பிறந்தவர்கள். அவ்வகை குழந்தைகளையும் அவர்களின் தாய்மாரையும் பராமரிக்கும் St. Mary’s Home என்ற நிலையத்திலேயே இந்த கழிவு குழி உள்ளது. இந்த நிலையம் 1922ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை Catholic Church இன் கட்டுப்பாட்டில் இருந்தது.

இங்கே 1943ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போது 6 மாத வயதுடைய Mary Margaret என்ற குழந்தையின் உடலும் வீசப்பட்டு உள்ளது. இந்த குழந்தையின் தாய்க்கு அப்போது வயது 17.

2014ம் ஆண்டு Catherine Corless என்றவர் செய்த ஆய்வு ஒன்றே இந்த உண்மையை பகிரங்கம் செய்தது. ஆரம்பத்தில் அதிகாரிகள் இந்த உண்மையை மறைக்க முற்பட்டனர். மறைக்கும் முயற்சி தோல்வியுற, 2015ம் ஆண்டு அயர்லாந்து அரசு விசாரணையை ஆரம்பித்தது.

இங்கே உள்ள உடல்கள் 35 கிழமைகள் முதல் 3 வயதுடைய சிறுவர்களின் உடல்கள் என்று அறியப்பட்டுள்ளது.