அயோத்தி இராமர் கோவில் உண்டியல் திருட்டில்?

அயோத்தி இராமர் கோவில் உண்டியல் திருட்டில்?

2024ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டிருந்த அயோத்தி இராமர் கோவில் உண்டியல் பணம், நகைகள் ஆகியன திருடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன.

இந்த கோவிலுக்கு சராசரியாக ஒவ்வொரு நாளும் 70,000 முதல் 80,000 பக்தர்கள் வருவதாகவும், அவர்களிடம் இருந்து காணிக்கை பெற 35 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த உண்டியல்கள் மூலம் கடந்த ஆண்டு 3.27 பில்லியன் ரூபாய்கள் ($35 மில்லியன்) காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

இந்த உண்டியல் பணத்தில் 70 மில்லியன் ரூபாய்கள் திருடப்பட்டு உள்ளதாக Mahipal Singh என்ற முன்னாள் மேற்பார்வையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.