இன்று புதன்கிழமை முதல் அஸ்ரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு social media சேவை தடை செய்யப்பட்டுள்ளது. உலகில் இவ்வாறான தடை ஒன்றை நடைமுறை செய்யும் முதலாவது நாடு அஸ்ரேலியாவே.
YouTube, Facebook, TikTok, Snapchat, Instagram, X, Reddit உட்பட அனைத்து social media சேவைகளும் இந்த அஸ்ரேலிய சட்டத்துக்கு உட்பட 16 வயதினருக்கான சேவைகளை துண்டிக்க இணங்கி உள்ளன. ஆரம்பத்தில் இந்த நிறுவனங்கள் தடைக்கு எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் இறுதியில் தடைக்கு உட்பட தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த சட்டம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தினால் ஏனைய நாடுகளும் இவ்வகை சட்டத்தை தமது நாடுகளில் நடைமுறை செய்யக்கூடும்.
டிசம்பர் 10ம் திகதி நடைமுறைக்கு வரும் இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் A$49.5 மில்லியன் (U$32 மில்லியன்) வரையான குற்ற பணத்தை செலுத்த நேரிடும்.
பொதுவாக social media நிறுவனங்கள் இளையோரின் தற்போதைய கணக்குகளை அவர்கள் 16 வயதை அடையும் வரை முடக்கி வைக்க உள்ளன.
WhatsApp போன்ற சில app களுக்கு மேற்படி தடை இல்லை.
