ஆக்கிரமித்த West Bank பகுதியில் மேலும் 3,300 யூத வீடுகள்

ஆக்கிரமித்த West Bank பகுதியில் மேலும் 3,300 யூத வீடுகள்

இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள West Bank பகுதியில் அண்மையில் ஒரு யூதர் பலஸ்தீன ஆயுதாரியால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். அதற்கு தண்டனையாக இஸ்ரேல் 3,300 வீடுகளை யூதர்களுக்கு ஆக்கிரமித்து உள்ள West Bank பகுதியில் கட்ட உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலின் நிதி அமைச்சர் Bezalel Smotrich இந்த அறிவிப்பை வியாழன் இரவு தெரிவித்து இருந்தார்.

மேற்படி புதிய வீடுகளில் 300 யூத வீடுகள் ஆக்கிரமித்து உள்ள Kedar பகுதியிலும், 2,350 யூத வீடுகள் ஆக்கிரமித்து உள்ள Maale Adumim பகுதியிலும் கட்டப்படும்.

வழமைபோல் அமெரிக்கா இந்த அறிவிப்புக்கு சாட்டுக்கு அழுதுள்ளது. அதற்கு அப்பால் கட்டுமானத்தை தடுக்க அமெரிக்கா எதுவும் செய்யும் என்று அறிவிக்கவில்லை.

பல பலஸ்தீனர் யூத ஆக்கிரமிப்பாளர்களால் கொலை செய்யப்பட்டு இருந்தாலும் அவற்றுக்கு தண்டனையாக பலஸ்தீனர்களுக்கு வீடுகள் கட்டப்படுவது இல்லை.

பலஸ்தீனரின் West Bank பகுதியை இஸ்ரேல் 1967ம் ஆண்டு ஆக்கிரமித்து இருந்தது.