ஆறு பிரிவுகளாகும் சீனாவின் அலிபாபா நிறுவனம்

ஆறு பிரிவுகளாகும் சீனாவின் அலிபாபா நிறுவனம்

அலிபாபா (Alibaba) என்ற மிகப்பெரிய சீன நிறுவனம் 6 பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது. இந்த பிரிவை சீன அரசே முன்னின்று செய்யதாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை தனியார் வர்த்தகங்கள் அரசிலும் பெரிதாக வளர்வதை சீன அரசு தடுக்க முயல்வதாக தெரிகிறது.

1999ம் ஆண்டு ஜாக் மா (Jack Ma) என்ற சீனரால் ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா என்ற eCommerce வர்த்தகம் விரைவில் வளர்ந்து உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றானது.

தனது பண பலத்தால் அலிபாபா வட்டிக்கு கடன் வழங்கும் வர்த்தகம் ஒன்றை ஆரம்பிக்க முனைந்த வேளையில் சீன அரசு அதை தடுத்தது. அலிபாபாவுக்கு வங்கி வர்த்தகம் செய்ய உரிமை இல்லை என்று தடுத்தது.

அரசுடனான முரண்பாடு உக்கிரம் அடைய ஜாக் மா சுமார் 2 ஆண்டுகள் வரை தலைமறைவாகி இருந்தார். அலிபாபா வர்த்தக உடைப்பு செய்தி வந்த காலத்தில் ஜாக் மாவும் வெளிவந்துள்ளார்.

தற்போது அலி பாபா உலகத்தில் 3வது பெரிய eCommerce வர்த்தகமாகும். இதில் சுமார் 254,000 ஊழியர் பணியாற்றுகின்றனர். இதன் பங்குச்சந்தை பெறுமதி தற்போது சுமார் $260 பில்லியன் ஆக உள்ளது.

2021ம் ஆண்டு  ஜாக் மாவிடம் $48.4 பில்லியன் சொத்துக்கள்- இருப்பதாக கூறியிருந்தது.