ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அழிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) திங்கள் வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை இதுவரை கசிந்து வந்த அழிவு உண்மைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
குவைத், பஹ்ரைன், கட்டார், UAE, சவுதி, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் இருந்த பலநூறு அமெரிக்க படைகளின் தளங்களை ஈரான் தாக்கி அழித்தமையை இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க படைகளின் ஆயுத மற்றும் ஏவுகணை கையிருப்பு பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதையும் அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றை ஈரான் யுத்தத்துக்கு முன்னான நிலைக்கு அதிகரிக்க குறைந்தது 3 ஆண்டுகள் தேவையாம்.
ஈரான் குறைந்தது 30 அமெரிக்க MQ-9 வகை drone களையும் (ஒவ்வொன்றும் சுமார் $30 மில்லியன் பெறுமதியானது), குறைந்தது 7 வானத்தில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் KC-135 விமானங்களும் (ஒவ்வொன்றும் சுமார் $80 மில்லியன் பெறுமதியானது), அழிக்கப்பட்டுள்ளன.
சவுதியில் இருந்த அமெரிக்க தூதரகம் மட்டுமன்றி CIA யின் இரகசிய தளம் ஒன்றையும் ஈரான் தாக்கி அழித்ததை இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன் மத்தியகிழக்கு அமெரிக்க படைகளுக்கு தேவையான பொருட்கள் தற்போது டியேகோ கார்சியா (Diego Garcia) என்ற அமெரிக்க இந்துசமுத்திர தளத்தில் இருந்தே நேரடியாக பகிரப்படுகின்றன.
அமெரிக்காவின் மேற்படி இராணுவ தளங்கள் மீண்டும் மத்திய கிழக்கில் கட்டப்படுவது கேள்விக்குறியே என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது படைகளை கொண்டிருக்கும் வழிகளில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்பது புலனாகி உள்ளது.
