இந்தியாவில் அலுவலகத்தை ஆரம்பிக்கும் Embraer 

இந்தியாவில் அலுவலகத்தை ஆரம்பிக்கும் Embraer 

பிரேசில் (Brazil) என்ற தென் அமெரிக்க நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான Embraer இந்திய தலைநகர் டில்லியில் தனது கிளை அலுவலகத்தை ஆரம்பித்து உள்ளது.

அமெரிக்காவின் Boeing மற்றும் ஐரோப்பாவின் Airbus ஆகிய பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்து உலகின் 3வது பெரிய நிறுவனம் Embraer. ஆனாலும் இந்தியாவில் Embraer விமானங்கள் தொகை மிக குறைவு.

2005ம் ஆண்டில் முதல் Embraer விமானம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும் இன்று வரை சுமார் 30 விமானங்களே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அவையும் பெரும்பாலும்  இந்திய விமான படை போன்ற அரச பிரிவுகளாலேயே கொள்வனவு செய்யப்பட்டு உள்ளன. இந்திய பயணிகள் விமான சேவை நிறுவனங்கள் Embraer விமானங்களை நாடவில்லை.

Embraer இந்தியாவில் விமானங்களை பொருத்த ஆரம்பித்தால் அந்த அறிவை பெருக்கி இந்தியா எதிர்காலத்தில் தனது சொந்த விமான தயாரிப்பில் ஈடுபடலாம். அவ்வாறே சீனா செய்திருந்தது.