தொழில்நுட்பத்தில் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் உன்னதமாக வளர்ந்து smartphone போன்ற பல மிக பயனான பொருட்களை வழங்க உலகம் எங்கும் அவற்றால் ஏற்படக்கூடும் ஆபத்துகளை முன் பின் சிந்திக்காது அவற்றை கொள்வனவு செய்து அனுபவித்தன.
நட்பு நாட்டவர் மட்டுமன்றி எதிரி நாட்டவரும் முன் பின் சிந்திக்காது மேற்படி தொழில்நுட்பங்களை கொள்வனவு செய்து அனுபவித்தனர்.
ஆனால் தற்போது இந்த தொழில்நுட்பங்கள் தங்களை இலகுவில் வேவு பார்க்கலாம் என்ற உண்மையை அறிந்த இந்தியா இவற்றின் source code களை பெற்று அவற்றுள் திருட்டு நோக்கம் கொண்ட படிமுறைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த முனைகிறது.
Google (Android), Apple (iPhone) போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் மேற்படி நகர்வை தடுக்க முனைகின்றன.
சீனா 2014ம் ஆண்டு முதல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
