இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவின் HIRE Act 2025

இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவின் HIRE Act 2025

அமெரிக்க ரம்ப் அரசு Halting International Relocation of Employment Act 2025 (HIRE Act 2025) என்ற சட்டத்தை நடைமுறை செய்ய முனைகிறது. அவ்வாறு சட்டம் ஒன்று நடைமுறை செய்யப்பட்டால் அந்த சட்டத்தால் அதிகம் பாதிப்பு அடையப்போவது இந்தியாவே.

பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களை அடையும்போது இலகுவில் இறக்குமதி வரி அரவிடலாம். ஆனால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் software களுக்கு அவ்வாறு வரி அறவிட முடியாது. சிலவேளைகளில் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்தே அமெரிக்காவில் software code எழுதப்படலாம்.

அதனால் அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியா போன்ற வெளிநாடுகளில் software தயாரிப்புக்கு செலவிடும் பணத்துக்கே (outsourcing payment) 25% மேலதிக வரி அறவிடப்படும்.

இந்த 25% வரியை அமெரிக்க நிறுவனம் தனது வருமான வரி கணிப்பில் (income tax) செலவாக காணிக்கவும் முடியாதாம் (non-deductible).

இந்தியா ஆண்டுக்கு சுமார் $283 பில்லியன் வருமானத்தை இவ்வகை software தொழில்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செய்வதன் மூலம் பெறுகிறது. அதில் பெரும்பான்மை வருமானம் அமெரிக்காவில் இருந்து கிடைக்கிறது.

Tata Consultancy Services (TCS), Infosys, HCLTech, Wipro ஆகியன இந்தியாவின் முன்னணி software தயாரிப்பு நிறுவனங்கள். சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்த நிறுவங்கள் பெரும் இழப்பை சந்திக்கும்.