ஈரானில் இருந்து 600,000 பரல் எரிபொருளுடன் இந்திய குஜராத் மாநிலத்து Vadinar என்ற துறைமுகத்தை நோக்கி சென்ற Ping Shun என்ற மசகு எண்ணெய் காவும் கப்பல் தனது பயணத்தை திடீரென சீனாவின் Dongying நோக்கி திருப்பி உள்ளது.
இந்த கப்பல் இந்திய துறைமுகத்தை நாளை ஏப்ரல் 4ம் திகதி அடைய இருந்த நிலையில், மேற்படி எண்ணெய்க்கு உரிய பணத்தை இந்தியா இதுவரை ஈரானுக்கு செலுத்தவில்லை என்பதே கப்பல் திசை திரும்பியதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் விருப்பத்துக்கு அமைய 2019ம் ஆண்டு முதல் இந்தியா ஈரானிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தி இருந்தது. அதனால் தற்போது இந்தியாவிடம் ஈரானுக்கு பணம் செலுத்த வழியில்லை.
இந்தியா சீன நாணயம் மூலம் ஈரானுக்கு இலகுவில் பணம் செலுத்தலாம் என்றாலும் சீன நாணயம் பலம் பெறுவதை இந்தியா விரும்பாது.
தடைகள், யுத்தங்கள் காரணமாக ஈரான் கடனுக்கு எண்ணெய் விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளது.
அதனால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் உக்கிரம் ஆகலாம்.
