இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் யுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 26 உல்லாச பயணிகளை படுகொலை செய்தமைக்கு பதிலடி வழங்கும் நோக்கில் இந்தியா பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் 9 இடங்களில் தாக்குதல்களை செய்துள்ளது. இந்த தாக்குதலுக்கு குறைந்தது 26 பேர் பாகிஸ்தான் தரப்பில் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பதிலுக்கு செய்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பிலும் குறைந்தது 10 பேர் பலியாகியும், 32 காயமடைந்தும் உள்ளனர் என்கிறது இந்தியா.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு குறுக்கே இரு தரப்பும் எறிகணை, ஏவுகணை தாக்குதல்களை செய்கின்றன.
அதேவேளை பாகிஸ்தான் தாம் 5 இந்திய யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது. இந்த செய்திக்கு இதுவரை ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை அனால் சில படங்கள் இணையத்தில் உள்ளன. அவையும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தியா தாம் Lashjar-e-Tayyiba என்ற ஆயுத குழு மீதே தாக்குதல் செய்ததாகவும், பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்குதல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த தாக்குதலை இந்திய Operation Sindoor என்று அழைத்துள்ளது.
நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளுக்கு பயணிக்க இருந்த பிரதமர் மோதி யுத்தம் காரணமாக தனது பயணத்தை இடைநிறுத்தி உள்ளார்.
சர்வதேச விமானங்கள் இந்த வான்பரப்பை பாவனையில் இருந்து விலக்கி உள்ளன.