இந்தியா மீது 50% வரியை அறிவித்துள்ளார் ரம்ப் 

இந்தியா மீது 50% வரியை அறிவித்துள்ளார் ரம்ப் 

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை அறவிட உள்ளதாக ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி ஆகஸ்ட் 27ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னர் இந்தியாவுக்கான வரி 25% என்று ரம்ப் கூறியிருந்தாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தண்டனையாக மேலும் 25% வரி அறவிடப்படுகிறது.

ரம்பின் முதலாம் ஆட்சியில் ரம்ப் பிரதமர் மோதியுடன் மிக நெருக்கமாக பழகி இருந்தார். Texas மாநிலத்தில் இடம்பெற்ற Howdy Modi கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்கா $87 பில்லியன் பெறுமதியான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. அதேவேளை இந்தியா $42 பில்லியன் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.