அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுக்கு இந்தியா 7 புதிய யுத்த விமானங்களை இழந்திருந்தது என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார்.
ஆசியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ரம்ப் ஜப்பானில் செய்த உரை ஒன்றில் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின்போது “7 planes were shot down, 7 brand new beautiful planes were shout down” என்று கூறினார்.
இந்தியா இதுவரை அந்த யுத்தத்தில் தனது யுத்த இழப்புகளை முறைப்படி அறிவிக்காமை ரம்ப் போன்ற பலர் தமது கருத்துக்களை வெளியிட வழி செய்கிறது.
அத்துடன் கடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தை தானே நிறுத்தியதாகவும் ரம்ப் மீண்டும் கூறினார். மேற்படி யுத்தம் தொடர்ந்தால் “we are not going to do any trade” என்று இரண்டு தரப்பையும் மிரட்டியதாலேயே யுத்தம் 24 மணி நேரத்துள் கைவிடப்பட்டது என்று ரம்ப் கூறினார்.
ஆனால் யுத்தத்தை தாமும், பாகிஸ்தானும் நேரடியாக பேசியே நிறுத்தியதாக இந்தியா கூறுகிறது. அதில் மூன்றாம் தரப்பின் உதவி இல்லை என்றும் இந்தியா கூறுகிறது.
