சுமார் $7.4 பில்லியன் (630 பில்லியன் இந்திய ரூபாய்கள்) பெறுமதியான 26 Fafale என்ற பிரான்சின் யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய திங்கள் அறிவித்துள்ளது.
ஒரு ஆசனத்தை மட்டும் கொண்ட இந்த யுத்த விமானங்கள் பிரான்சின் Dassault Aviation நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை. இவை அனைத்தும் இந்தியாவின் கரங்களை 2030ம் ஆண்டு அளவில் முற்றாக அடையும்.
இந்த 26 விமானங்களில் 4 விமானங்கள் மட்டும் 2 ஆசனங்களை கொண்டிருக்கும். இந்திய யுத்த விமானிகளுக்கு பயிற்சி வழங்க இந்த நான்கும் பயன்படும்.
ஏனைய 22 விமானங்களும் INS Vikrant என்ற விமானம் தங்கியில் நிலைகொள்ளும்.
தற்போது இந்திய விமானப்படை 36 Rafale யுத்த விமானங்களை கொண்டிருந்தாலும் இந்தியாவின் கடற்படை ரஷ்யா தயாரித்த MiG 29 வகை விமானங்களையே கொண்டுள்ளது.
அமெரிக்கா தனது Boeing நிறுவனம் தயாரித்த F/A 18E Super Hornet வகை யுத்த விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முனைந்திருந்தாலும் Rafael வென்றுள்ளது. இதனால் அமெரிக்க சனாதிபதி ரம்ப் சிறிது மூர்க்கம் கொள்ளலாம்.
தற்போது இந்தியாவிடம் சுமார் 510 யுத்த விமானங்களே உள்ளன. அவற்றில் பல மிக பழையவை. அத்துடன் இந்தியாவின் சொந்த யுத்த விமான தயாரிப்பு போதிய வளர்ச்சி அடையவில்லை. அதேவேளை சீனாவிடம் சுமார் 1,210 யுத்த விமானங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சீனாவின் சொந்த தயாரிப்புகள், சில அமெரிக்க விமானங்களின் தரத்தை ஒத்தவை.
அமெரிக்காவிடம் சுமார் 1,790 யுத்த விமானங்களும், ரஷ்யாவிடம் 830 யுத்த விமானங்களும் உள்ளன. பாகிஸ்தானிடம் சுமார் 320 விமானங்கள் உள்ளன.