இந்திய கல்வி அமைச்சர் பதவி விலக ஆர்ப்பாட்டங்கள் நின்றன

இந்திய கல்வி அமைச்சர் பதவி விலக ஆர்ப்பாட்டங்கள் நின்றன

இந்திய கல்வி அமைச்சர் Dharmendra Pradhan பதவி விலகியததை தொடர்ந்து Cockroach Janta Party (CJP) செய்து வந்த ஆர்ப்பாட்டங்கள் இன்று சனிக்கிழமை நிறைவுக்கு வந்துள்ளன.

தேசிய அளவில் நடைபெறும் NEET வினா கேள்விகள் சோதனைக்கு முன் கசிந்ததை கண்டித்த CJP ஆதரவாளர் இந்திய கல்வி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

இவ்வாறு பாரதீய ஜனதா கட்சியின் பிரதான அமைச்சர் ஒருவர் ஆர்ப்பாட்டங்களுக்கு இரையாகி இருப்பது இதுவே முதல் தடவை.

CJP ஒரு தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்ல. இது ஒரு ஆர்ப்பாட்ட குழு தமக்கு வைத்துக்கொண்ட நையாண்டி பெயரே. இவர்களை இந்திய நீதிபதி ஒருவர் cockroaches என்று கீழ்த்தரமாக அழைத்திருந்தார். அதையே குழு தனது பெயராக அமைத்தது.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்து Sonam Wangchuk என்பவர் 26 தினங்கள் உண்ணாவிரதம் இருந்தார். இவரும் கல்வி அமைச்சரின் பதவி விலகல் “victory of democracy” என்றுள்ளார்.