இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய தாயும், இரண்டு மகள்களும் 

இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய தாயும், இரண்டு மகள்களும் 

இந்திய கர்நாடக மாநிலத்து Ramatirtha Hill குகை ஒன்றில் வாழ்ந்த Nina Kutina என்ற 40 வயது ரஷ்ய தாயையும் அவரின் 6 மற்றும் 4 வயது பெண் பிள்ளைகளையும் வன அதிகாரிகள் ஜூலை 9ம் திகதி கைப்பற்றி உள்ளனர். 

தாயின் இந்திய விசா பல ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்து உள்ளது. தாய் வழங்கிய இந்த சிறு குடும்பத்தின் தரவுகள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் உள்ளன.

2017ம் ஆண்டுக்கு முன் இவர்கள் 4 நாடுகளில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 2017ம் ஆண்டே, அதாவது 8 ஆண்டுகளுக்கு முன், தாய் இந்தியா வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் அவருக்கு எப்படி 6 மற்றும் 4 வயதில் குழந்தைகள் இருக்கும்?

தாய் 2017ம் ஆண்டு business விசா ஒன்றின் மூலம் Goa வந்துள்ளார் என்கிறது போலீஸ். பின் 2018ம் ஆண்டு தாய் நேபால் சென்று இந்தியா திரும்பியதாகவும் போலீசார் அறிந்துள்ளனர்.

பிள்ளைகளின் கடவுசீட்டு, விசா போன்ற ஆவணங்களை தாய் போலீசாருக்கு வழங்க மறுத்துள்ளார். பிள்ளைகள் ரஷ்யாவில் பிறந்தவர்களா அல்லது இந்தியாவில் பிறந்தவர்களா என்பதையும் தாய் கூறவில்லை.

இந்தியா ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இவர்கள் மறைந்து வாழ வேறு நபர்கள் உதிவி இருக்கலாம்.