இந்திய தேர்தல் ஆணையாளரிடம் நீதிமன்றமும் கேள்விகள் 

இந்திய தேர்தல் ஆணையாளரிடம் நீதிமன்றமும் கேள்விகள் 

இந்திய Cockroach கட்சி ஆரம்பித்த தேர்தல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டத்தில் தற்போது இந்திய உயர் நீதிமன்றமும் இணைந்துள்ளது. Cockroach கட்சி ஆர்ப்பாட்டக்காரர் கேட்ட கேள்விகளை நேற்று திங்கள் இந்திய உயர் நீதிமன்றமும் சட்டப்படி கேட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் இந்த கேள்விகளை குறிப்பாக பிரதமர் மோதி அரசுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் விடுத்துள்ளது. 

அண்மையில் இந்திய தேர்தல் ஆணையாளர் Gyanesh Kumar தலைமையில் தேர்தல் திணைக்களம் கடந்த ஆண்டு முதல் மேற்கொண்ட Special Intensive Revision (SIR) திருத்தங்கள் காரணமாக சுமார் 130 மில்லியன் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

Kumar இவர்களை மரணித்தோர், ஒன்றுக்கு மேலான இடங்களில் பதிந்தோர் என்றும் சிலர் ஊருவிகள் என்றும் கூறுகிறார். ஆனால் இவர்களில் பலர் பொதுவாக பா.ஜ. கட்சிக்கு வாக்களியாத சிறுபான்மை குழுவினர் என்கிறது Cockroach கட்சி.

பெரும்பாலானோர் டெல்லி, பீகார், மேற்கு வங்கம் போன்ற இடங்களிலேயே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.