இந்திய-பிரான்ஸ் நீர்மூழ்கி தரவுகள் அம்பலத்தில்

DCNS

பிரான்சின் DCNS என்ற நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா ஆறு Scorpene வகை நீர்மூழ்கிகளை தயாரிக்க இணங்கியது. இந்திய தன்னிடம் உள்ள சோவியத் காலத்து நீர்மூழ்கிகளுக்கு பதிலாக இந்த புதிய Scorpene வகை நீர்மூழ்கிகளை கடல் படைக்கு வழங்கவிருந்தது. அந்த ஆறில் ஒரு நீர்மூழ்கி சில மாதங்களின் முன் வெள்ளோதிடத்திலும் ஈடுபட்டு உள்ளது.
.
ஆனால் அந்த நீர்மூழ்கிகளின் முக்கிய தரவுகள் அண்மையில் முன்னாள் ஊழியர் ஒருவரால் பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த உண்மைகள் தற்போது எல்லோர் கைகளிலும் உள்ளதால், இந்த ஆறு நீர்மூழ்கிகளும் எதிரிகளால் இலகுவில் அடையாளம் காணப்படலாம் என்றும், இதன் செயல்பாடுகள் எதிரிகளுக்கு தெரியும் என்று கூறப்படுகிறது.
.
இந்த நீர்மூழ்கிகள் மும்பாயின் அருகில் உள்ள ஒரு துறைமுகத்திலேயே கட்டப்படுகின்றன. அங்கு இந்த கட்டுமானத்தில் கடமை புரிந்த ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட போதே 22,000 பக்கங்கள் கொண்ட இந்த தரவுகளை அம்பலம்படுத்தி உள்ளார்.
.
DCNS என்ற இந்த நிறுவனத்தாலேயே Barracuda வகை நீர்மூழ்கிகள் பலதை ஆஸ்திரேலியாவும் சுமார் US$ 38 பில்லியனுக்கு தயாரிக்க இருந்தது. ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவும் இத்திட்டத்தில் அச்சம் கொண்டுள்ளது.
.
முதல் தடவையில் 6 Scropeneகளுக்கு இணங்கி இருத்தலும், மேலும் 3 நீர்மூழ்கிகளை கட்டுமானம் செய்ய இந்தியா முன்வந்திருந்தது. ஆனால் தற்போது அவை Scropene களாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
.

இந்தியாவிடம் தற்போது 13 நீர்மூழ்கிகள் இருந்தாலும், வயது காரணமாக அதில் சுமார் அரை பங்கே ஒருநேரத்தில் சேவையில் ஈடுபடும்.
.