Henley Passport Index அமைப்பின் இந்த ஆண்டுக்கான கடவுச்சீட்டு தராதர கணிப்பில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு கொண்டோர் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
இரண்டாம் இடத்தில் உள்ள தென் கொரிய, ஜப்பான் கடவுச்சீட்டு கொண்டோர் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து கடவுச்சீட்டு கொண்டோர் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
2014ம் ஆண்டில் 1ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கடவுச்சீட்டு இந்த ஆண்டு 10ம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது.
இறுதியில் உள்ள ஆப்கானித்தான் கடவுச்சீட்டு கொண்டோர் 25 நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி பயணிக்கலாம்.
இலங்கை கடவுச்சீட்டு கொண்டோர் 42 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இது 91ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இது 96ம் இடத்தில் இருந்தது. ஆனால் 2006ம் ஆண்டு இது 74ம் இடத்தில் இருந்தது.
60ம் இடத்தில் உள்ள சீன கடவுச்சீட்டு கொண்டோர் 83 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். 2015ம் ஆண்டு இது 94ம் இடத்தில் இருந்தது.
77ம் இடத்தில் உள்ள இந்திய கடவுச்சீட்டு கொண்டோர் 59 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
முதல் 10 இடங்களில் உள்ள கடவுச்சீட்டுகள்:
- Singapore (193 destinations)
- Japan, South Korea (190)
- Denmark, Finland, France, Germany, Ireland, Italy, Spain (189)
- Austria, Belgium, Luxembourg, Netherlands, Norway, Portugal, Sweden (188)
- Greece, New Zealand, Switzerland (187)
- United Kingdom (186)
- Australia, Czech Republic, Hungary, Malta, Poland (185)
- Canada, Estonia, United Arab Emirates (184)
- Croatia, Latvia, Slovakia, Slovenia (183)
- Iceland, Lithuania, United States (182)