இந்த ஆண்டு மன்சூன் மழை பிந்துகிறது

இந்த ஆண்டு மன்சூன் மழை பிந்துகிறது

இந்த ஆண்டுக்கான மன்சூன் (தென் மேற்கு பருவக்காற்று) சில தினங்கள் பிந்துகிறது என்று இந்திய வானிலை அவதானிப்பு நிலையமான India Meteorological Department (IMD) கூறுகிறது. அதனால் இலங்கைக்கு வரும் மழை முகில்களும் பிந்தலாம்.

அரேபிய கடலில் இருந்து மழை முகில்களை எடுத்துவரும் மன்சூன் ஜூன் மாதம் 4ம் திகதி அளவில் கேரளா கரைகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மேலும் சில தினங்களின் பின்னரே அம்முகில்கள் கேரளாவை அடையும் என்கிறது இந்திய IMD.

இந்தியாவுக்கு தேவையான மழை நீரில் 70% மன்சூன் மூலமே கிடைக்கிறது. இந்த மழை நீர் அங்கு $3 டிரில்லியன் பொருளாதாரத்துக்கு அடிப்படையாகிறது.

இந்தியாவில் அரிசி, பருத்தி, சோளம் கரும்பு போன்ற வர்த்தக பயிர்கள் மன்சூன் மழையை நம்பியவை.