இன்று புதன்கிழமை முதலில் சீன சனாதிபதி சீக்கும், ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கும் இடையில் ஒரு அவசர இணையம் மூலமான உரையாடல் இடம்பெற்றது. இந்த உரையாடலின் விபரங்கள் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.
மேற்படி உரையாடல் முடிந்து சில மணித்தியாலத்துள் சீக்கும் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் இடையில் இன்னொரு இணைய மூல உரையாடல் இடம்பெற்றது. இந்த இரண்டாம் உரையாடலின் விபரங்களும் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.
சீ ரம்புடன் உரையாட இருந்தமை ஏற்கனவே ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது என்று ரஷ்யா கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் 2010ம் ஆண்டு செய்யப்பட்ட New START Treaty என்ற ஏவுகணை கட்டுப்பட்டு இணக்கம் நாளை வியாழன் முடிவடைகிறது. புதிய இணக்கம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
