இரண்டு வயது பிள்ளையை இந்தியா திருப்ப வேண்டுகோள்

இரண்டு வயது பிள்ளையை இந்தியா திருப்ப வேண்டுகோள்

தற்போது ஜெர்மனியில் வாழும் இந்திய வம்ச 2 வயது பெண் பிள்ளையை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும்படி கேட்கிறது இந்தியா. Ariha Shah என்ற பிள்ளை தற்போது ஜெர்மனியின் Youth Welfare Office கையில் உள்ளது. அவளின் பெற்றார் இந்தியா திரும்பி உள்ளனர்.

பிள்ளையின் தகப்பனார் 2021 ஆண்டில் ஜெர்மனி சென்று பணியாற்றி இருந்தார். ஆக்காலத்தில் ஜெர்மனி சென்ற பிள்ளையின் பாட்டி செய்த தண்டிப்பு ஒன்றின்போது காயமுற்ற பிள்ளையை பெற்றார் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

அப்போதே பிள்ளை ஜெர்மன் அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பிள்ளைக்கு வயது 7 மாதங்கள் மட்டுமே. தற்போது பெற்றார் இந்தியா திரும்பி உள்ளனர்.

இந்தியா தம்மிடம் சிறுவர் பராமரிப்பு கட்டமைப்பு உண்டு என்றாலும், இந்தியாவின் அழைப்புக்கு ஜெர்மனி இதுவரை இணங்கவில்லை.