இருவரை பெற்றெடுத்து, ஐவரை தத்தெடுக்கும் பெற்றார்

Lisa

அமெரிக்காவின் Kentucky மாநிலத்தின் Georgetown நகாரில் வாழும் Lisa Lumpkins க்கும் அவரது கணவர் Gene க்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளன. அதில் ஒருவர் 7 வயது உடையவர், மற்றையவர் 14 வயது உடையவர். இவர்கள் குடும்பம் வசதிகள் கொண்ட நடுத்தர குடும்பம். ஆனால் Lisa வுக்கு மேலும் குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் தோன்றியது. அத்துடன் சுகதேகியான குழந்தைகளை விட நோய்வாய்ப்பட்ட குழந்தைகளிலேயே நாட்டம் உருவாகியது.
.
2008 ஆம் ஆண்டில் 43 வயதான Lisa சீனா சென்று 18 மாத பெண் குழந்தையான Mayaவை தத்தெடுத்தார். Mayaவை எடுக்க சென்றபோதே அவர் முதல் முறையாக விமானம் ஏறியுள்ளார். Maya bowel மற்றும் gallbladder குறைபாடுகள் உள்ள பெண் குழந்தை.
.
சீனாவில் மேலும் பல குழந்தைகளால் கவரப்பட்ட Lisa அங்கிருந்து 2010 ஆண்டில் Noah வையும், 2013 ஆண்டில் Aubrey ஐயும், 2014 ஆம் ஆண்டில் Carter ஐயும் தத்தெடுத்தார். ஒவ்வொரு குழந்தைக்கும் தத்தெடுப்புக்கு மட்டும் சுமார் $35,000 செலவழித்துள்ளனர்.
.
இந்த வருடம் மார்ச்சில் தான் தத்தெடுத்த Aubreyஐ போல் இன்னோர் பெண் இன்னோர் பராமரிப்பு இல்லத்தில் இருப்பதை Lisa Internet இல் கண்டார். தனது செலவில் DNA சோதனை செய்து அப்பெண் Aubreyயின் இரணை சகோதரி என்பதை நிருபித்தார். இந்த பெண்ணுக்கு cerebral palsy என்ற நோய் உண்டு. Lisa அப்பெண்ணையும் தத்தெடுக்க விரும்பினார்.
.
சீனாவின் சட்டப்படி 14 வயதுக்கு மேற்பட்டோர் வெளிநாட்டினரால் தத்து எடுக்கப்பட முடியாது. Aubrey இக்கு வரும் ஆகஸ்டில் 14 வயது ஆகப்போகிறது. Lisa விடம் போதிய பணம் இல்லை. உடனே Internet மூலம் பணம் சேர்க்க முனைந்தார்.
.

இதை அறிந்த Leon Logothetis என்ற பிரித்தானியர் உதவ முன்வைத்தார். அவரின் உதவியுடன் பணம் சேர்க்கிறார் Lisa.
.