இறுதிவரை மறுத்து, இறுதியில் யுத்த நிறுத்தத்தை நீடித்த ரம்ப் 

இறுதிவரை மறுத்து, இறுதியில் யுத்த நிறுத்தத்தை நீடித்த ரம்ப் 

புதன்கிழமை முடியவிருந்த ஈரானுடனான 2-கிழமை யுத்த நிறுத்தத்தை நீடிக்க மாட்டேன் என்று இறுதி வரை உறுதியாக கூறிவந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் இறுதி நேரத்தில் யுத்த நிறுத்தத்தை கால வரையறை இன்றி நீடித்து உள்ளார்.

ஈரான் ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்கும் வரை (until Tehran has submitted a proposal to end the conflict) யுத்த நிறுத்தத்தை நீடிக்கிறேன் என்று ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க உதவி சனாதிபதி இறுதி நேரம் வரை இரண்டாம் சுற்று பேச்சுக்கு பாகிஸ்தான் செல்ல தயாராக இருந்திருந்தாலும் ஈரான் தமது துறைமுகங்கள் மீதான தடையை நீக்காவிடில் பேச்சுக்கு இடமில்லை என்றும், ஹோர்முஸ் கப்பல் பாதையை திறக்க முடியாது என்றும் ஈரான் கூறியது.

அதனால் யுத்த நிறுத்தம் நீடிக்கப்பட்டாலும் ஹோர்முஸ் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு முடங்கியே இருக்கும்.

அதேநேரம் ஈரானுடனான யுத்தம் காரணமாக அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு பாரிய அளவில் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா தனது கையிருப்பின் 45% Precision Strike ஏவுகணைகள், 50% ஏவுகணை தடுப்பு THAAD ஏவுகணைகள், 50% Patriot ஏவுகணைகள், 30% Tomahawk ஏவுகணைகள், 20% Air-to-Surface ஏவுகணைகள், 20% SM-3, SM-6 ஏவுகணைகள் ஆகியவற்றை ஈரான் யுத்தத்தில் செலவழித்து உள்ளதாக Center for Strategic and International Studies என்ற அமைப்பு கூறியுள்ளது. இந்நிலை அமெரிக்காவுக்கு ஆபத்தானது.