இலங்கைக்கு இந்தியா மேலும் $450 மில்லியன் உதவி

இலங்கைக்கு இந்தியா மேலும் $450 மில்லியன் உதவி

இலங்கைக்கு மேலும் $450 மில்லியன் உதவி செய்யவுள்ளதாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். இந்த உதவி வீதி, ரயில் பாதை, பால திருத்தங்களுக்கு பயன்படும் என்று கூறியுள்ளார்.

அண்மைய காலங்களில் இந்தியா இலங்கையில் இருந்து பெருமளவு பணத்தை உழைத்து வருகிறது. 1998ம் ஆண்டு இணங்கி, 2000ம் ஆண்டு முதல் நடைமுறை செய்யப்பட்ட India-Sri Lanka Free Trade Agreement (ISFTA) இந்தியாவுடனான வர்த்தகத்தில் இலங்கைக்கு பாரிய அளவில் ஏற்றுமதிக்கு மேலான இறக்குமதி (deficit) தொகைக்கு காரணமாக உள்ளது.

2024ம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கான ஏற்றுமதி $883 மில்லியன் ஆக இருக்க, இந்தியாவில் இருந்தான இறக்குமதி $3.76 பில்லியன் ஆக இருந்துள்ளது. அதனால் 2024ம் ஆண்டில் மட்டும் இலங்கையுடனான வர்த்தகம் இந்தியாவுக்கு $2.87 பில்லியனை மேலதிகமாக வழங்கி உள்ளது.

குறிப்பாக இலங்கை யுத்தம் 2009ம் ஆண்டு முடிந்த பின், தமிழர் பகுதிக்கு பெருமளவு வெளிநாட்டு தமிழர் பணம் செல்ல, இப்பணம் பெருமளவு இந்திய பொருட்களுக்கு சந்தையை உருவாக்கியுள்ளது. இந்திய motorcycle, கார், தொழில்நுட்ப உபகரணங்கள், கட்டிட பொருட்கள் ஆகியன பெருமளவில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. முன்னர் இவை ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டன.