கடந்த வியாழக்கிழமை Dialog நிறுவனமும், வெள்ளிக்கிழமை SLT-Mobitel நிறுவனமும் இலங்கையில் 5G தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஆரம்பித்து உள்ளன. ஆனாலும் இந்த சேவை பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.
அண்மையில் இலங்கை அரசு 5G சேவைக்கு தேவையான 3.5 GHz மற்றும் 27 GHz அலைவரிசைகளின் (spectrum) பாவனை உரிமையை Dialog, Mobitel ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து 5 பில்லியன் ரூபாய்களை பெற்று இருந்தது.
5G சேவை சுமார் 10 முதல் 20 Gbps வரையான வேகத்தில் தரவுகளை வழங்க வல்லது. ஆனால் 4G சுமார் 0.4 Gbps வரையான வேகத்திலேயே தரவுகளை தருகிறது.
5G வசதி கொண்ட smartphone களில் மட்டுமே இந்த அதிவிரைவாக சேவை கிடைக்கும். 5G சேவை இல்லாத இடங்களில் இவை 4G சேவைக்கு தானாக மாறிவிடும்.
5G பாவனைக்கு வந்தாலும் 4G பாவனை தற்போதைக்கு அழிந்துவிடாது. 5G சனத்தொகை கூடிய பெரிய நகரங்களுக்கு இலாபகரமாக இருப்பது போல் சனத்தொகை குறைந்த கிராமங்களுக்கு பயனளிக்கா. அத்துடன் 4G tower ஒன்று, மலைகள் போன்ற தடைகள் இல்லாத இடங்களில், சுமார் 40 km தொலைவுக்கு சேவையை வழங்கும். ஆனால் 5G tower ஒவ்வொன்றும் சில km தூரத்துக்கே சேவையை வழங்கும்.
மேலே உள்ள படத்தில் Dialog யாழ்ப்பாணத்தில் தரும் 5G சேவை பரப்பளவு தரப்பட்டுள்ளது.
