இலண்டனில் முதல் இஸ்லாமிய நகரபிதா

SadiqKhan

பிரித்தானியாவின் இலண்டன் மாநகரத்தின் நகரபிதாவாக Sadiq Khan என்பவர் இன்று வெள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் போட்டியிட்ட Labor கட்சி 9 ஆசனங்களை வென்றிருந்தது. மொத்தத்தில் இவர்கள் 44% வாக்குகளை பெற்றிருந்தனர். Zac Goldsimth என்பவரின் தலைமயில் போட்டியிட்ட Conservative கட்சி 5 ஆசனங்களையும், 31% வாக்குகளையும் பெற்றிருந்தது. Green கட்சி 9% வாக்குளை பெற்றிருந்தது.
.
Labor ஆட்சியில் இருந்தபோது இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். இவர் Tooting தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் Tooting என்ற இடத்தில் பிறந்திருந்தாலும் இவரின் பெற்றார் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து குடியேறியவர்கள். இவரின் பாட்டனார், இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்கள். இவருக்கு 6 சகோதரர்களும் 1 சகோதரியும் உள்ளனர்.
.
இலண்டன் வருடம் ஒன்றுக்கு சுமார் $23 பில்லியன் நிதி ஒதுக்கீடை (budget) கொண்டதோர் நகரம்.
.

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணிப்பீட்டின்படி இலண்டனில் 50% குறைவானோரே வெள்ளை இனத்தவர்.
.