இஸ்ரேலின் காசா தாக்குதலுக்கு ஒரு வைத்தியரின் 9 பிள்ளைகள் பலி 

இஸ்ரேலின் காசா தாக்குதலுக்கு ஒரு வைத்தியரின் 9 பிள்ளைகள் பலி 

காசாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை செய்த விமான தாக்குதலுக்கு 10 பிள்ளைகளை கொண்ட Alaa al-Najjar என்ற பெண் வைத்தியரின் 9 பிள்ளைகள் பலியாகி உள்ளனர்.

அதே வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் கணவர் வைத்தியரான மனைவியை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய வேளையிலேயே இஸ்ரேலின் விமானம் வீட்டை தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு 11 வயது மகனும், தந்தையும் காயப்பட 9 பிள்ளைகள் பலியாகினர். இவர்களின் மூத்த பிள்ளைக்கு வயது 12.

காயங்களுடன் தப்பிய 11 வயது மகனுக்கு Graeme Groom என்ற பிரித்தானிய வைத்தியர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

வெள்ளி நண்பகல் முதல் சனி நண்பகல் வரையான 24 மணி நேரத்தில் இஸ்ரேல் 74 பேர் காசாவில் பலியாகி உள்ளனர்.