காசாவில் வாழும் பலஸ்தீனருக்கும், West Bank பலஸ்தீனருக்கும் அப்பால் இஸ்ரேலுள்ளும் பெரும்தொகை பலஸ்தீனர் வாழ்கிறார்கள். இஸ்ரேல் குடியுரிமை கொண்ட இவர்கள் மொத்த இஸ்ரேல் சனத்தொகையின் 20%.
காசா மற்றும் West Bank பலஸ்தீனரை மட்டுமன்றி இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட பலஸ்தீனரையும் கடுமையாக வஞ்சிக்கிறது இஸ்ரேல்.
கடந்த ஆண்டு இஸ்ரேல் யூதர்கள் மத்தியில் இடம்பெற்ற கொலைகளில் 65% கொலைகளை இஸ்ரேல் போலீசார் முழு மனதுடன் விசாரணை செய்து கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ளனர் என்றும் ஆனால் இஸ்ரேல் பலஸ்தீனர் மத்தியில் இடம்பெற்ற கொலைகளில் 15% மட்டுமே போலீசாரால் துலக்கம் செய்யப்பட்டு உள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதனால் இஸ்ரேல் பலஸ்தீனர் மத்தியில் வன்முறை கும்பல்கள் அதிகரிக்க, இஸ்ரேல் பாராமுகத்துடன் உள்ளமை தெரிகிறது.
2025ம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனர் மத்தியில் 252 கொலைகள் இடம்பெற்று உள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே இவர்களுள் 46 கொலைகள் இடம்பெற்று உள்ளன.
இவ்வகை கொலைகளுக்கு எதிராக பலஸ்தீனர் பெருமளவில் வாழும் இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், கதைவடைப்புகளும் செய்யப்பட்டாலும் இஸ்ரேல் போலீசார் பலஸ்தீனர் மத்தியில் இடம்பெறும் கொலைகளை கண் கொள்ளாது உள்ளனர்.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் நிகழும்போது “போலீசும் சேர்ந்து தான்” என்பார்கள்.
