இஸ்ரேலை ஈரான் தாக்கலாம்; இஸ்ரேல், அமெரிக்கா விழிப்புடன்

இஸ்ரேலை ஈரான் தாக்கலாம்; இஸ்ரேல், அமெரிக்கா விழிப்புடன்

இஸ்ரேலை ஈரான் எந்த கணமும் தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகுந்த விழிப்புடன் உள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் தமது நாட்டவர் இஸ்ரேல் செல்வதை தவிர்கவும் கேட்டுள்ளன.

சுமார் இரண்டு கிழமைகளுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு அருகில் உள்ள நிலையம் ஒன்றை இஸ்ரேல் தாக்கி இருந்தது. அந்த தாக்குதலுக்கு பிரிகேடியர் ஜெனரல் Mohammad Reza Zahedi, ஈரானின் உயர் படை அதிகாரிகள் உட்பட 13 பேர் பலியாகி இருந்தனர்.

அந்த தாக்குதலுக்கு தாம் பதிலடி வழங்க உள்ளதாக உறுதியாக கூறியுள்ளது.

ஈரான் drones, cruise missiles, ballistic missiles கொண்டு தாக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு கருதுகிறது.