இஸ்ரேல் அறியாத ஈரான் யுத்த நிறுத்த உள்ளடக்கம்

இஸ்ரேல் அறியாத ஈரான் யுத்த நிறுத்த உள்ளடக்கம்

அமெரிக்க சனாதிபதி ரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகுவும் கூட்டாகவே ஈரான் மீது யுத்தத்தை பெப்ரவரி 28ம் திகதி ஆரம்பித்து இருந்தனர். ஆனால் யுத்தம் தோல்வியில் முடிய, ரம்புக்கும் நெட்டன்யாகுவுக்கும் இடையில் உறவு முறிந்துள்ளது.

தற்போது ரம்பால் கையொப்பம் இடப்பட்ட, வெள்ளிக்கிழமை ஈரானால் கையொப்பம் இடப்படவுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் இஸ்ரேலுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் குமுறுகிறது இஸ்ரேல்.

இந்த உடன்படிக்கை ஈரானுக்கு மறைமுகமாக $300 பில்லியன் மீள் கட்டுமான பண உதவியும் வழங்குகிறது என்ற செய்தியும் கசிந்துள்ளது.

அதேவேளை ஈரான் எந்த நேரமும் ஹோர்முஸ் பாதையை மூடும் வல்லமையையும், சவுதி, குவைத், UAE, கட்டார், பஹ்ரைன் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளை தாக்கும் வல்லமையையும் பெற்றுவிட்டதாக அமெரிக்க உளவுகள் அறிந்துள்ளன.