West Bank, Golan Heights, காசா ஆகிய இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனர் இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் தடை விதிக்கிறது.
குறிப்பாக காசாவில் இஸ்ரேல் செய்யும் குற்றங்களுக்கு பதிலடியாகவே பெல்ஜியம் இந்த தடையை நடைமுறை செய்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் கூட்டாக இவ்வகை தடை ஒன்றை செய்ய பேச்சுக்களை செய்து வந்தாலும் சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலை பாதுகாக்கும் நோக்கில் பேச்சை திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யும் நிலையில் பெல்ஜியம் சுயமாக தடையை விதிக்கிறது.
அதேவேளை இஸ்ரேலும் தடைகளில் இருந்து தப்பும் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏனைய இஸ்ரேல் பகுதிகளில் தயாரிக்கப்பட்டவை என்று பொய்யாக முத்திரை இட (mislabeled) வசதி செய்கிறது.
