இஸ்ரேல் தேர்தலில் நெத்தன்யாகு தோல்வி அடைவார்?

இஸ்ரேல் தேர்தலில் நெத்தன்யாகு தோல்வி அடைவார்?

இஸ்ரேலில் செவ்வாய் இடம்பெற்ற பொது தேர்தலில் Likud கட்சி பிரதமர் நெத்தன்யாகுவும் (Netanyahu) அவரின் கடும் போக்கு கூட்டணியும் ஆட்சியை இழக்கக்கூடும் என்று தேர்தலின் ஆரம்ப கணிப்புகள் (exit pools) கூறுகின்றன.

அத்துடன் எந்த கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற முடியாத நிலையில் ஒரு கூட்டணி அரசே ஆட்சியை கைப்பற்றும், அல்லது மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெறலாம்.

Gadi Eisenkot என்பவரின் புதிய கட்சியை கொண்ட கூட்டணி 52 ஆசனங்களையும், பிரதமர் நெத்தன்யாகுவின் கட்சியை கொண்ட கூட்டணி 50 ஆசனங்களையும் பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதாவது தற்போதைய பிரதமரின் கூட்டணி 18 ஆசனங்களை இழக்கலாம்.

மொத்தம் 120 ஆசனங்களை கொண்ட Knesset என்ற இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க குறைந்தது 61 ஆசங்கள் தேவை.

இஸ்ரேலில் வாழும் பலஸ்தீனர்களின் Joint List கட்சி 11 ஆசனங்களும் Raam கட்சி 7 ஆசனங்களுமாக மொத்தம் 18 ஆசனங்களை வெல்ல கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

சட்டப்படியான தேர்தல் முடிவுகள் வெளிவர இரண்டு தினங்கள் எடுக்கலாம் என்றும், ஆட்சிக்கு தேவையான கூட்டணி அமைக்க கிழமைகள் எடுக்கலாம் அல்லது புதிய தேர்தல் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.