Ben-Gvir என்ற பாலஸ்தீனர்கள் மீது கடும் காழ்ப்பு கொண்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருக்கு அவரின் 50 வது பிறந்த தினத்தில் அவரின் மனைவி வழங்கிய பிறந்தநாள் கேக்கில் தூக்கு கயிறு பதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதில் எழுதப்பட்ட கீபுறு வசனம் “sometimes dreams do come true” என்றுள்ளது. அதாவது சிலவேளைகளில் கனவுகள் நடைமுறை ஆகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
அண்மையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள West Bank பகுதி பாலஸ்தீனர்களுக்கு மட்டும் நடைமுறை செய்யப்பட்ட மரண தண்டனை சட்டத்தை கொண்டாடவே இந்த கேக்கில் உள்ள தூக்கு கயிறு.
