இஸ்ரேல் வைத்தியசாலை மீது 3 குண்டுகளை வீசியது, 2 அல்ல 

இஸ்ரேல் வைத்தியசாலை மீது 3 குண்டுகளை வீசியது, 2 அல்ல 

திங்கள் Nasser Medical Complex என்ற காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் மொத்தம் 3 குண்டுகளை வீசியது என்று தற்போது அறியப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் 4ம் மாடியில் இருந்த பத்திரிகையாளர் மீது திங்கள் காலை 10:08 மணிக்கு முதல் குண்டு வீசப்பட்டது. அவர் மட்டும் அந்த குண்டுக்கு பலியானார்.

அவ்விடத்துக்கு உதவிக்கு விரைந்த வைத்தியர்கள், பத்திரிகையாளர் மீது மேலும் 2 குண்டுகள், ஒன்றின் ஒன்றின் பின் ஒன்றாக, 10:17 மணிக்கு வீசப்பட்டன. இந்த 2 குண்டுகளுக்கும் மேலும் 21 பேர் பலியாகினர். இந்த குண்டுகள் கணிக்கப்பட்டு ஏவப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் நேரத்துக்கு ஒரு கதையாக பல கதைகளை கூறியுள்ளது.

1ம் கதை (திங்கள்): தாம் வைத்தியசாலை மீது தாக்கவில்லை என்றது இஸ்ரேல் இராணுவம்.

2ம் கதை (திங்கள்): பிரதமர் நெட்டன்யாஹு தாக்குதல் ஒரு “tragic mishap” என்றும், தான் “deeply regrets” என்றும் கூறினார்.

3ம் கதை (செவ்வாய்): தம்மை நோட்டம் விடும் ஹமாஸின் ஒளிப்பட கருவியையே தாம் தாக்கியதாக கூறியது இஸ்ரேல் இராணுவம். அப்படியானால் 2ம், 3ம் குண்டுகள் எதற்கு?