ஈரானின் தாக்குதலுக்கு 6 அமெரிக்க படையினர் பலி 

ஈரானின் தாக்குதலுக்கு 6 அமெரிக்க படையினர் பலி 

குவைத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் செய்த தாக்குதலுக்கு பலியான படையினர் தொகை 6 ஆக உயர்ந்துள்ளது.

Siren சத்தம் எதுவும் எதுவும் இன்றி Shuaiba துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் குவைத் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு இடம்பெற்று இருந்தாலும் முழு விபரமும் திங்கள் பிற்பகலே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு drone தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Drone தாக்குதல் காரணமாக கட்டாரின் QatarEnergy நிறுவனம் LNG எரிவாயு உற்பத்தியை இடைநிறுத்தி உள்ளது. உலகின் மொத்த LNG எரிவாயு உற்பத்தியின் 20% கட்டாரால் செய்யப்படுகிறது. அதனால் உலக அளவில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் ஏற்படும்.

மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை ஏற்றி செல்லும் கப்பல்கள் ஈரானுக்கும் UAEக்கும் இடையே உள்ள Strait of Hormuz என்ற ஒடுங்கிய நீரினை மூலமே செல்லவேண்டும். அது தற்போது தடைப்பட்டு உள்ளதால் சுமார் 700 கப்பல்கள் இப்பகுதியில் முடங்கி உள்ளன. கட்டார் எரிவாயுவின் 82% ஆசியாவுக்கு வருகிறது.

வேறு ஒரு தாக்குதலுக்கு 2 குவைத் படையினர் பலியாகி உள்ளனர்.

சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகமும் தாக்குதலுக்கு உள்ளாகியது.

கட்டார் முடிவடைந்த விசாவுடன் முடங்கி உள்ள வெளிநாட்டவர்க்கு மேலும் ஒரு மாதகால விசா நீடிப்பை அறிவித்துள்ளது.