ஈரானில் அமெரிக்க, பிரித்தானிய Coup 53

ஈரானில் அமெரிக்க, பிரித்தானிய Coup 53

அமெரிக்கா இன்று ஈரானில் சனநாயகத்தை இல்லை என்று அழுகிறது. ஆனால் ஈரானில் அமைத்திருந்த சனநாயக ஆட்சியை அமெரிக்காவும், பிரித்தானியாவும் தமது பண, ஆயுத பலங்களை பயன்படுத்தி 67 ஆண்டுகளுக்கு முன் கவிழ்ப்பு செய்திருந்தன. அந்த உண்மையை சித்தரிக்கும் ‘Coup 53’ என்ற ஆவண படம் (documentary film) ஒன்று தற்போது அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அர்லாண்ட் ஆகிய நாடுகளில் இணையத்தில் வெளிவந்துள்ளது.

ஈரானியரான Taghi Amirani என்பவரும், Walter Murch என்பவரும் இணைந்து உருவாக்கிய இந்த படம் கடந்த ஆண்டு Most Popular International Documentary விருதைம் பெற்று இருந்தது.

1953 ஆம் ஆண்டு ஈரானிய மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியிலிருந்த பிரதமர் Mohammad Mossadegh அரசை அமெரிகாவின் CIA மற்றும் பிரித்தானியாவின் MI6 உளவு அமைப்புகள் Operation Ajax என்ற பெயரிடப்பட்ட கவிழ்ப்பு மூலம் விரட்டி இருந்தன. இந்த கவிழ்ப்புக்கு காரணம் ஈரானின் எணெய்யை தாம் கொள்ளை கொள்வதே.

அக்காலம்வரை பிரித்தானியாவின் British Petroleum (BP) ஈரானின் எண்ணெய்வளத்தை தனது கட்டுப்பாடில் வைத்திருந்தது. விற்பனை செய்யப்படும் ஈரானிய எண்ணெய்யின் 16% பெறுமதியை மட்டுமே ஈரானுக்கு செலுத்தியது BP. அத்துடன் BP பெற்ற வரவுகளை ஈரானுக்கு மறைக்கும் உரிமையையும் BP கொண்டிருந்தது.

BP யின் கபடத்தை வெறுத்த Mossadegh அரசு ஈரானில் எண்ணெய் அகழ்வுகளை தேசியம் ஆக்கியது. அதனால் கோபம் கொண்ட பிரித்தானியா அமெரிக்காவுடன் இணைந்து Mossadegh யை விரட்ட தீர்மானம் செய்தது.

Mossadegh யின் ஆட்சியை கவிழ்த்தபின் பின்னர் மேற்கின் கைபொம்மையான Muhammad Shah ஆட்சியில் அமர்த்தப்பட்டார். 1979 ஆம் ஆண்டு இடம்பெற்ற Iranian Revolution மேற்கின் கைபொம்மையான Shah வின் ஆட்சியை விரட்டி இருந்தது.