ஈரானை நோக்கி அமெரிக்க விமானங்கள், படைகள்

Iran

அமெரிக்காவின் B-52 வகை குண்டு வீச்சு விமானங்கள், USS Abraham Lincoln என்ற விமானம் தாங்கி கப்பல் ஆகியன மத்திய கிழக்கை நோக்கி விரைகின்றன. கூடவே Mike Pompeo என்ற அமெரிக்காவின் Secretary of State உம் இன்று செவ்வாய் ஈராக் சென்றுள்ளார்.
.
ஈரான் மேற்கொள்ளும் முரண்பாட்டு நடவடிக்கைள் காரணமாகவே தாம் மேலதிக படைகளை அங்கு அனுப்புவதாக அமெரிக்கா கூறி இருந்தாலும், குறிப்பிட்ட எந்தவொரு உதாரணத்தையும் அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.
.
ஈரானும் தாம் நாளை புதன் சில அறிவிப்புகளை செய்யவுள்ளதாக கூறி உள்ளது.
.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்து, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்து ஈரானை அமெரிக்காவுக்கும் கூடவே இஸ்ரேலுக்கும் அடிபணிய வைக்க முயல்கிறது அமெரிக்கா. ஈரான் மட்டுமே மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு முரணான பலமான நாடாக  உள்ளது. ஈரானின் உதவியுடனேயே சிரியாவின் அசாத் எதிரிகளை வென்றுள்ளார். லெபனானின் உள்ள மிக பலம் பொருந்திய ஹிஸ்புல்லா இயக்கம் ஈரானின் ஆதரவை கொண்டது. பாலஸ்தீனர்களுக்கும் ஈரான் உதவி வருகிறது.
.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் மீறி சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி உட்பட பல முக்கிய நாடுகள் தொடர்ந்தும் ஈரானின் எணெய்யை கொள்வனவு செய்கின்றன.

.