ஈரானை வெல்ல புதிய ‘ideas’ தேடுகிறது அமெரிக்க இராணுவம்

ஈரானை வெல்ல புதிய ‘ideas’ தேடுகிறது அமெரிக்க இராணுவம்

ஈரானை அழித்துவிட்டோம் (obliterated), ஈரானை வென்றுவிட்டோம் என்றெல்லாம் கடந்த 12 மாதங்களாக வெற்றி முரசு கொட்டிவந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகனிடம் ஈரானை வெல்ல ‘ideas’ கேட்டுள்ளார்.

ரம்ப் சார்பில் கடந்த புதன்கிழமை பென்ரகன் உயர் அதிகாரி ஒருவர் பென்ரகன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயில் ஒன்றில் ஈரானை வெல்ல புதிய ideas தருமாறு கேட்டுள்ளார்.

அந்த ஈமெயிலில் “We are looking for new creative and unconventional ways to pressure and punish Iran” என்று கேட்கப்பட்டுள்ளது.

அணுகுண்டை தவிர தன்னிடம் உள்ள மற்றைய ஆயுதங்கள் எல்லாவற்றையும் வீசியும் ரம்பால் ஈரானை தன் விருப்பத்துக்கு அடிபணிய வைக்க முடியவில்லை. பதிலுக்கு ஈரான் தற்போது மேலும் பலம் அடைந்துள்ளது. குறிப்பாக முன்னர் திறந்து இருந்த ஹோர்முஸ் கடல் பாதையை ஈரான் தற்போது மூடிவிட்டது.

ரம்பின் முப்படை தளபதி ஜெனரல் Dan Caine தனது உரை ஒன்றில் “Air power has its limits” என்று ஏற்கனவே கூறியுள்ளார்.