அமெரிக்கா ஈரானின் Fordow, Natanz, Esfahan ஆகிய 3 அணு உலைகள் மீது சனிக்கிழமை தாக்கியதாக அறிவித்துள்ளது. அத்துடன் தாக்கிய அமெரிக்காவின் விமானங்கள் ஈரானின் வான் பரப்புக்கு அப்பால் சென்றுள்ளன என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா தனது B-2 வகை குண்டுவீச்சு விமானங்களை Guam என்ற தீவுக்கு அண்மையில் அனுப்பி இருந்தது. இங்கே அமெரிக்காவின் மிகப்பெரிய தளம் உண்டு.
B-2 குண்டு வீச்சு விமானம் 30,000 இறாத்தல் எடை கொண்ட GBU-57 (Guided Bomb Unit) வகை குண்டுகளை வீசக்கூடியது.
B-2 விமானங்கள் வழமையாக அமெரிக்காவின் Missouri மாநிலத்தில் உள்ள Whiteman விமானப்படை தளத்தில் நிலைகொள்ளும். இவை சராசரியாக 50,000 அடி உயரத்தில் பறப்பவை.