அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஈரான் அருகே பெருமளவு ஆயுதங்களை குவித்து வருகிறார். இந்த குவிப்பு வெறும் மிரட்டலா, அல்லது ஈரான் மீதான தாக்குதலுக்கான தயார்படுத்தலா என்பது சில கிழமைகளுக்குள் தெரிந்துவிடும்.
USS Abraham Lincoln, USS Gerald R. Ford ஆகிய அமெரிக்காவின் 2 விமானம் தாங்கி கப்பல்கள் வளைகுடாவுக்கு சென்றுள்ளன. அவற்றுடன் பெருமளவு தாக்குதல் கப்பல்களும் வளைகுடா சென்றுள்ளன.
பிரித்தானியாவில் நிலைகொண்டுள்ள யுத்த விமானங்களுக்கு வானத்தில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்காவின் விமானங்களும் (refueling tankers) வளைகுடாவை அண்டிய பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன.
ஜோர்டான், பஹ்ரைன், சவுதி அரேபிய ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்க இராணுவ தளபாடங்கள், யுத்த விமானங்கள் ஆகியன அனுப்பப்பட்டு உள்ளன.
மறுபுறம் அமெரிக்காவும், ஈரானும் இன்று செவ்வாய் வரை ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
