ஈரான் பேச்சு இழுபாட்டால் குமுறுகிறார் ரம்ப் 

ஈரான் பேச்சு இழுபாட்டால் குமுறுகிறார் ரம்ப் 

தான் விரும்பும் தீர்வுக்கு ஈரான் உடன்படாததால் முறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். குண்டுகளை வீசி தனது விருப்பங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் ரம்ப் தன் விருப்பங்களை பேச்சுக்கள் மூலம் அடைய முனைகிறார்.

குறிப்பாக அமெரிக்காவின் இறுதி திட்டத்தை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. அதனால் ரம்ப் மீண்டும் ஈரான் மீது குண்டுகளை வீச ஆரம்பிக்கலாம். ஆனால் குறைந்தது சுமார் 100,000 முதல் 200,000 வரையான அமெரிக்க படைகளை களத்தில் இறக்காது ரம்ப் எதையும் சாதிக்க முடியாது. அவ்வாறு இறக்கினால் அது வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் வரிசையில் அமையும்.

அதனால் ரம்புக்கு பெரும் படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை. ரம்பை ஏவி விட்ட இஸ்ரேலும் தனது படைகளை ஈரானுக்கு அனுப்பாது.

மே மாதம் 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை சீனா சென்று சீன சனாதிபதி சீயுடன் உரையாடவுள்ள ரம்ப் ஈரான் தீர்வுக்கு சீனாவின் உதவியை நாடுவார்.

சீனாவுடனும் ரம்ப் நல்ல உறவை கொண்டிருக்காத நிலையில் ரம்ப்-சீ சந்திப்பு பெரும் தீர்மானங்கள் எதையும் ஏற்படுத்தா.