ஈரான் நேரப்படி வெள்ளி ஜூன் 13 அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை செய்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Katz தாம் preemptive தாக்குதல் செய்ததாக கூறியுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) பல குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்தாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து எதையும் இதுவரை கூறவில்லை. இந்த தாக்குதலில் தாம் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் இடம்பெற இருந்தமை முன்கூட்டியே தெரியும் என்கிறது அமெரிக்கா.
இஸ்ரேல் ஈரானில் சுமார் 12 இடங்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
தெஹ்ரான் வான் பரப்பு விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில் வான் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கின்றன. இங்கே அவசரகால சட்டம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.