ஈரான் யுத்தத்துக்கு 80% அமெரிக்க THAAD தடுப்பு ஏவுகணை தீர்ந்தன

ஈரான் யுத்தத்துக்கு 80% அமெரிக்க THAAD தடுப்பு ஏவுகணை தீர்ந்தன


அமெரிக்காவின் ஈரான் மீதான யுத்தத்துக்கு தனது கையிருப்பில் இருந்த THAAD தடுப்பு ஏவுகணைகளின் 80% ஏவுகணைகளை ஏவி உள்ளதாக கூறப்படுகிறது. இது அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசுக்கு ஒரு ஆபத்தான நிலையாகும்.

ஈரான் யுத்தத்துக்கு முன் அமெரிக்காவிடம் 452 மிகவும் தரமான THAAD தடுப்பு ஏவுகணைகள் இருந்ததாகவும் தற்போது அத்தொகையின் 20% மட்டுமே மிஞ்சி உள்ளன என்றும் கூறப்படுகிறது. ரம்ப் அரசு இந்த உண்மையை மறைத்து வருகிறது.

எதிரியின் ஏவுகணை வருவதை அறிந்து அதை தடுத்து அழிக்கும் வல்லமை கொண்ட THAAD தடுப்பு ஏவுகணை ஒன்றின் விலை சுமார் $13 மில்லியன். அவற்றை ஏவ பயன்படும் ஏவி (battery) ஒன்றின் விலை சுமார் $1 பில்லியன்.

ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்த 2,200 Patriots தடுப்பு ஏவுகணைகளில் 50% ஈரான் யுத்தத்துக்கு பயன்படுத்தப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.

விலை உயர்ந்த THAAD மற்றும் Patriots அமெரிக்க தடுப்பு ஏவுகணைகள் ஈரான் ஏவிய விலை குறைந்த drone களை அழிக்கவே பயன்பட்டன.