ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆரம்பித்த யுத்தம் முடிவின்றி தொடர, ஹோர்முஸ் பாதை மூடப்பட, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட, Exxon, Chevron போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைகின்றன.
Exxon இந்த ஆண்டின் இரண்டாம் வர்த்தக காலாண்டில் $14.5 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது. அதாவது தினமும் $160 மில்லியன் இலாபம் அடைந்துள்ளது.
இந்த இலாபம் கடந்த ஆண்டு, ஈரான் மீதான யுத்தத்துக்கு முன், இரண்டாம் காலாண்டில் Exxon அடைந்த இலாபத்தின் இரண்டு மடங்கிலும் அதிகம்.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய எரிபொருள் நிறுவனமான Chevron இரண்டாம் காலாண்டில் $12.1 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது. Chevron கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் அடைந்த இலாபம் $2.5 பில்லியன் மட்டுமே. அதாவது இலாபம் இம்முறை சுமார் 5 மடங்கு.
British Petroleum இரண்டாம் காலாண்டில் $5.73 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது. அதுவும் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் தொகையிலும் இரண்டு மடங்கு அதிகம்.
