ஈரான் யுத்தம் தவறு என கூறி அமெரிக்க உயர் அதிகாரி பதவி விலகினார்

ஈரான் யுத்தம் தவறு என கூறி அமெரிக்க உயர் அதிகாரி பதவி விலகினார்

ஈரானில் அமெரிக்கா செய்யும் யுத்தம் தவறு என்று கூறி அமெரிக்காவின் National Counterterrorism Center Director பதவியில் உள்ள Joseph Kent என்பவர் செவ்வாய் தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தில் “I cannot in good conscience support the ongoing war in Iran. Iran posed no imminent threat to our nation, and it is clear ​that we started this war due to pressure from Israel and its powerful lobby,” என்று கூறியுள்ளார்.

அதாவது ஈரான் அமெரிக்காவுக்கு எந்தவொரு உடனடி ஆபத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும், இஸ்ரேலும் அதன் அமெரிக்க ஆதரவாளரும் அழுத்தம் வழக்கியதாலேயே அமெரிக்கா ஈரானை தாக்குகிறது என்றும் அதனால் ஈரான் மீதான யுத்தத்தை தன்னால் ஆதரிக்க முடியாது என்று Kent கூறியுள்ளார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்ற கருத்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் வலுவடைந்து வருகிறது. 

NATO அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீதான யுத்தத்தில் தாம் பங்கு எடுக்க முடியாது என்று கூறியுள்ளன. இதனால் ரம்ப் விசனம் கொண்டுள்ளார்.