ஈரான் 100+ drone களை இஸ்ரேல் நோக்கி ஏவியது

ஈரான் 100+ drone களை இஸ்ரேல் நோக்கி ஏவியது

ஈரான் நூற்றுக்கும் அதிகமான drone களையும் பல ballistic ஏவுகணைகளையும் சனிக்கிழமை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளது. இந்த drone கள் தமது குறிகளை அடைய பல மணித்தியாலங்கள் எடுக்கும்.

இஸ்ரேலில் அபாய அறிவிப்பு siren ஒலிகள் எழுப்பப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தனது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை உள்நோக்கி வரும் ஈரானின் ஏவுகணைகளை நோக்கி ஏவியுள்ளது.

இஸ்ரேலின் வான் பரப்பு விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பல பயணிகள் திசை திருப்பப்பட்டு உள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக தமது முதலாம் தாக்குதலை செய்து முடித்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது. ஈரானின் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கி 13 பேரை கொலை செய்ததற்கு பதிலடியே இந்த தாக்குதல். இஸ்ரேல் தொடர்ந்தும் ஈரானை தாக்கினால் ஈரான் திருப்பி தாக்கும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு யுத்தம் மேலும் வலுப்பெற்று உள்ளது.