ஈரான் “civilization will die tonight” என்கிறார் ரம்ப் 

ஈரான் “civilization will die tonight” என்கிறார் ரம்ப் 

ஈரானில் தான் நினைத்தவற்றை சாதிக்க முடியாமையால் மூர்க்கத்தின் உச்சத்தில் குமுறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். ரம்பால் ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியவில்லை, ஒரு கைப்பொம்மை அரசை அமர்த்த முடியவில்லை, ஈரானின் எண்ணெய் வளத்தை திருட முடியவில்லை, இறுதியில் தான் ஆரம்பித்த யுத்தத்தை தன்னால் நிறுத்த முடியவில்லை.

இறுதியில் நியூ யார்க் நேரப்படி செவ்வாய் இரவு 8:00 மணிக்கு முன் ஈரான் தான் கூறும்படியான யுத்த நிறுத்தத்துக்கு வரவிடின் ஈரான் “civilization will die tonight” என்று மிரட்டி உள்ளார் ரம்ப்.

இஸ்ரேல் தந்திரமாக ரம்பை ஈரான் யுத்தத்தில் மாட்டிவிட, தற்போது தான் ஆரம்பித்த யுத்தத்தை நிறுத்த முடியாததால் உளற ஆரம்பித்துள்ளார் ரம்ப்.

அத்துடன் இஸ்ரேல் தவிர வேறு எந்த நாடுகளும் அமெரிக்காவின் உதவிக்கு வராததால் பல நாடுகள் மீதும் வசை பாடியுள்ளார் ரம்ப். குறிப்பாக அஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை ரம்ப்  நேற்று இகழ்ந்துள்ளார்.

அதேவேளை மசகு எண்ணெய் பரல் ஒன்று $116 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இதன் விலை $57 ஆக மட்டுமே இருந்தது.