உதவி கப்பலை தடுத்து இஸ்ரேல், Greta Thunberg கைது

உதவி கப்பலை தடுத்து இஸ்ரேல், Greta Thunberg கைது

காசா நோக்கி உணவு, மருந்து போன்ற உதவிகளுடன் சென்ற கப்பலை தடுத்த இஸ்ரேல் அதில் பயணித்த Greta Thunberg போன்ற Freedom Flotilla Coalition (FFC)  தொண்டர்களை கைது செய்துள்ளது.

கப்பலையும் அதில் இருந்த பொருட்களையும் பறித்த இஸ்ரேல், அதில் பயணித்தோர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த கப்பலை சர்வதேச கடலில் வைத்து இஸ்ரேல் தாக்கியதாக FFC கூறியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள Madleen என்ற இந்த கப்பல் இத்தாலியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தது.